தமிழகத்தில் நாளை (ஆக.26) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய தகவல் வெளியீடு!
மதுரை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி அலைந்து வருகின்றனர். இன்னும் அவர்களுக்கு ஏற்றவாறு வேலை கிடைக்கவில்லை என்று பலர் கூறுகின்றனர். தற்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலை மக்கள் சமாளிக்க வேலைவாய்ப்பு அவசிய ஒன்றாக உள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் தனியார்துறை வேலைவாய்ப்புகள் நடைபெறும்.
இதன் மூலம் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பை பெற்று பயனடைந்தனர். இடையில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் வேலைவாய்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டது. பிறகு பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து தற்போது அரசு அனுமதியுடன் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. அந்த வகையில் நாளை மதுரை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் Insurance கிடையாது – உயர் நீதிமன்றம் அதிரடி!
Exams Daily Mobile App Download
முகாமானது கே. புதூரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிறுவனங்கள் கல்வி தகுதிகளுக்கு ஏற்ப ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாமிற்கு வரும் வேலை நாடுநர்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்