சென்னையில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை – மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

0
சென்னையில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை - மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!
சென்னையில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை - மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!
சென்னையில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை – மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழை காரணமாக தக்காளி விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தக்காளி வியாபாரிகள் சங்கம் கோயம்பேடு மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்கப்படும் என்று முறையிட்டுள்ளனர்.

தக்காளி விலை அதிகரிப்பு:

தமிழகத்தில் கனமழை காரணமாக தக்காளி சாகுபடி குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் தக்காளியை அதிக அளவில் வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் தற்போது ஒரு கிலோ தக்காளி விலை ரூ.150 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் திறக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளன. இந்த முறையீட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி முதல் கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’ – மாநகராட்சி நிர்வாகம் முடிவு!

அதன் பின் செப்டம்பர் 28 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளன. இந்த மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் உள்ளது. இங்கு தான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் வந்து செல்கின்றன. கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த மைதானம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த மைதானம் திறந்தால் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் மார்கெட்டுக்குள் வரும் வாய்ப்புகள் அதிகமாகும். அப்போது தான் தக்காளி விலை உயர்வது தடுக்கப்படும் என்றும் தக்காளி வரத்து அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அஞ்சல் துறையில் 29 காலிப்பணியிடங்கள் – ரூ.34,000 சம்பளம்! விண்ணப்பிக்க டிச.5 கடைசி நாள்!

ஆனால் தற்போது அங்குள்ள 15 தக்காளி கடைகளுக்கு 30 லாரிகள் மட்டுமே வந்து செல்ல கூடிய நிலையுள்ளது. அதனால் தற்போது இந்த மைதானம் திறந்தால் ஜெய்ப்பூர், உதய்ப்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகா வழியாக தக்காளி ஏற்றி வரும் லாரிகள் அதிகரிக்கும். இதையடுத்து தக்காளியின் விலை அதிரடியாக குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தன. மேலும் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தாங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க முன்வந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here