தமிழகத்தில் 80 ரூபாயைத் தாண்டிய தக்காளியின் விலை – வேதனையில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் 80 ரூபாயைத் தாண்டிய தக்காளியின் விலை - வேதனையில் பொதுமக்கள்!
தமிழகத்தில் 80 ரூபாயைத் தாண்டிய தக்காளியின் விலை - வேதனையில் பொதுமக்கள்!
தமிழகத்தில் 80 ரூபாயைத் தாண்டிய தக்காளியின் விலை – வேதனையில் பொதுமக்கள்!

அன்றாட சமையலில் வெங்காயம், தக்காளி ஆகிய இரண்டும் காய்கறிகள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தக்காளி விலை உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகளுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தாறுமாறாக இருக்கும் நிலையில், தக்காளி விலையும் தற்போது உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிக அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

உயரும் தக்காளி விலை:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. இதற்கிடையில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ ரூ.50க்கு விற்ற தக்காளி விலை மேலும் அதிகரித்து ரூ.70 க்கு விற்கப்படுகிறது. மேலும் மார்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்கப்பட்டது. அதேபோல் மார்க்கெட்டில் உள்ள சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முதன்மை கல்வி அலுவலரின் முக்கிய உத்தரவு!

புறநகர் பகுதிகளில் 80 முதல் 90 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் ஒரு நாள் தக்காளி தேவை 1200 டன்னாக உள்ள நிலையில் தற்போது 500 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. தற்போது “அசானி” புயல் காரணமாக ஆந்திராவிலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் தக்காளி உற்பத்தி பாதிப்பு அடைந்து உள்ளது. இதன் காரணமாக மொத்தம் மொத்தமாக தக்காளி அழுகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இது மட்டுமல்லாமல், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் சில இடங்களில் தக்காளி செடிகள் கருகி பழங்கள் விவசாய நிலங்களிலேயே வீணாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதை அடுத்து டீசல் விலையேற்றத்தால் லாஜிஸ்டிக் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளன. மேலும் வடமாநிலங்களிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தக்காளியை கூடுதல் விலை கொடுத்து கொண்டு வருவதற்கு கோயம்பேடு ஒழுங்குமுறை விற்பனை கூட வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!