தமிழகத்தில் கிலோ 150 ரூபாயை தொட்ட தக்காளியின் விலை – பதுக்கலை தடுக்க நடவடிக்கை!
தமிழகத்தில் தக்காளி பதுக்கல் அதிகரித்து வருவதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதனால் தக்காளி பதுக்கலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தக்காளி விலை:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றாழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த அதிக கனமழையால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியில் வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது உடைமைகளை சேதப்படுத்தியது.
2022ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை – மாநில அரசு வெளியீடு!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தலைநகர் சென்னை வெள்ளக்காடாக மாறியது. இந்த தொடர் மழையால் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்தது. சாதாரணமாக கிலோ 20, 30 ரூபாய் ஆகிய விலைகளில் விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் 100 ரூபாயை எட்டியது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.குறிப்பாக தக்காளி கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழையால் தண்ணீரில் மூழ்கி காய்கறிகள் சேதமடைந்து வீணாகிறது. செடியிலேயே காய்கறிகள் வீணாகுவதால் காய்கறிகளின் வரத்து குறைந்தது.
பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – விடுமுறை அறிவிப்பு!
இதனால் தொடர்ந்து அதன் விலை அதிகரித்து. இந்த நிலையில் தக்காளியை பதுக்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது. ஏற்கனவே மழையால் தக்காளி வரத்து இல்லை. இந்த நேரத்தில் வரவிருக்கும் தக்காளியையும் பதுக்குவதால் இதன் விலை மேலும் அதிகரிக்கிறது. சாமானிய மக்கள் ஒரு மாத காலமாக காய்கறிகள் வாங்குவதையே தவிர்த்து வருகின்றனர். காய்கறிகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. இதன் விலை உயர்வது கண்டிக்கத்தக்கது. தக்காளி அதிகமாக விளைவிக்கப்படும் ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. அதனால் விலை உயர்வதாக வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தக்காளி பதுக்கலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.