செப்.1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமல் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

0
செப்.1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
செப்.1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
செப்.1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமல் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நாளை முதல் உளுந்தூர்பேட்டை – செங்குறிச்சி சுங்க சாவடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கட்டண உயர்வு:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் மொத்தம் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் ஒரு பகுதி சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி கட்டணம் உயர்த்தப்படும். மற்றொரு பகுதி சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும்.

அண்ணா பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – செப்.1 முதல் தொடக்கம்!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் உள்ள மற்ற 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளது. அதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை – செங்குறிச்சி சுங்க சாவடியில் நாளை முதல் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • வாகன ஓட்டிகள் செலுத்திவந்த கட்டணத்தை விட ரூ.5 முதல் ரூ.35 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  • கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு பலமுறை சென்று வர ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இலகுரக வாகனங்கள் பலமுறை சென்று வர கட்டணம் ரூ.140 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது தற்போது ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • பேருந்து, டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பலமுறை சென்று வர கட்டணம் ரூ.280 என இருந்து வந்த நிலையில் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பல அச்சுகள் கொண்ட வாகனங்கள் பலமுறை சென்று திரும்ப கட்டணம் ரூ.445 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது கட்டணம் ரூ.480 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது போன்ற கட்டண உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!