தமிழகத்தில் சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

0
தமிழகத்தில் சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒவ்வொரு வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் எவ்வளவு உயர போகிறது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுங்கக்கட்டணம்:

தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்க்காக வாகன ஓட்டுநர்களிடமிருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்நிலையில், உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், புதிய கட்டணங்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் – முழு விவரம் இதோ!

சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை மட்டுமே பயணிக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ரூ. 55 லிருந்து 65 ரூபாயாகவும், ஒரு நாளில் பலமுறை பயணிக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 85-லிருந்து 100 ரூபாயாகவும், மாத கட்டணம் ரூ.1,960 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக ஒருமுறை மட்டுமே பயணிக்கும் மினி லாரி, இலகுரக வாகன போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் 115 ரூபாயாகவும், ஒரு நாளில் பலமுறை பயணிக்கும் வாகனங்களுக்கு 170 ரூபாயாகவும், மாத கட்டணம் ரூ.3435 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒருமுறை பயணிக்கும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ. 200 லிருந்து 230 ரூபாயாகவும், பலமுறை பயணிக்கும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ. 300 லிருந்து 345 ரூபாயாகவும், மாத கட்டணம் ரூ.6870 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக ஒருமுறை பயணிக்கும் பல அச்சுகள் கொண்ட கனரக வணிக மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் ரூ. 320 லிருந்து 370 ரூபாயாகவும், பலமுறை பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ. 480 லிருந்து 550 ரூபாயாகவும், மாத கட்டணம் ரூ.11,035 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!