தீவிரமடையும் உக்ரைன், ரஷ்யா போர் – தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!

0
தீவிரமடையும் உக்ரைன், ரஷ்யா போர் - தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!
தீவிரமடையும் உக்ரைன், ரஷ்யா போர் - தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!
தீவிரமடையும் உக்ரைன், ரஷ்யா போர் – தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!

உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வு துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழர்கள் இணையதளம் வாயிலாக உதவியை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்:

உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் கட்டமாக கிழக்கு உக்ரைன் பகுதியில் அதாவது கிரிமியா பகுதியில் ரஷ்யா ஆக்கிரமித்து வருகிறது. மேலும் ஒடேசா, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவ ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போது ரஷ்யா உக்ரைன் எல்லையில் 2 லட்சம் வீரர்களை குவித்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா உக்ரைன் இடையில் இருக்கும் பதட்டம் ஏற்கனவே உலக மக்களை மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றம் மறுப்பு!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் அமைதியான நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதிகரித்து வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு உக்ரைனில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Post Office பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ள ஏர் இந்தியா விமானம் நடுவழியில் தவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வு துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனின் உள்ள தமிழர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவியை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!