தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – இலவச தொலைபேசி எண் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - இலவச தொலைபேசி எண் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - இலவச தொலைபேசி எண் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – இலவச தொலைபேசி எண் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் மட்டும் பயண கட்டணம் அதிமாக வசூலிக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பயண கட்டணம் அதிகரிப்பு:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பண்டிகைகள் ஏதும் கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் நவம்பர் 4 ம் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்கள் விடுமுறை தொடர்ந்து வருவதால் மக்கள் பெரும்பாலானோர் வெவ்வேறு பகுதியில் இருந்து அவர்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். இத்தகைய நிகழ்வானது அனைத்து வருடங்களிலும் நடக்கும் ஒரு விஷயமே. அதனை தொடர்ந்து தமிழக அரசு பஸ் வசதிகளை அதிகரித்து வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களின் நலன் கருதி 832 அரசு விரைவு சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் அக்.31க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!

இதற்கு  www.tnstc.in  என்ற இணையதளத்தில் முன்பதிவும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இதுவரையில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக இயக்குநர் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்பதிவு மேற்கொண்டு வருகின்றனர். ஆம்னி பஸ் என்றாலே பண்டிகை காலங்களில் அவர்கள் நிர்ணயிப்பது தான் பேருந்து கட்டணம். இதனால் சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும் பயணக் கட்டணங்களில் இருந்து சற்று அதிகரித்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நவ.1 முதல் 3 வரை – சூப்பர் அறிவிப்பு!

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா காலங்களையொட்டி மக்கள் பெரிதளவில் சொந்த ஊர் செல்லும்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இருப்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், சரக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து மக்கள் புகார் அளிக்கும் வகையில் இலவச தொலைபேசி எண் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கை குறித்து மக்கள் உற்ச்சாகத்தோடு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!