இன்று முதல் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம் – இந்திய வீரர்களுக்கு விராட் கோஹ்லி வாழ்த்து!

0
இன்று முதல் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம் - இந்திய வீரர்களுக்கு விராட் கோஹ்லி வாழ்த்து!
இன்று முதல் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம் - இந்திய வீரர்களுக்கு விராட் கோஹ்லி வாழ்த்து!

இன்று முதல் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம் – இந்திய வீரர்களுக்கு விராட் கோஹ்லி வாழ்த்து!

பாராலிம்பிக் போட்டிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ளும் இந்திய அணியினருக்கு விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டிகள் 2021:

ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பின்னர் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற துவங்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளை போலவே நடத்தப்படும். கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தொற்றின் தாக்கம் குறைந்த பின்னர் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக ரமீஸ் ராஜா நியமனம்? ஆலோசனைக்கு பின் தகவல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தாக்கம் குறைவாக இருந்த காரணத்தினால் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் தான் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு சிறப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கல புத்தகத்துடன் 48வது இடம் பிடித்து அசத்தியது. இந்தியாவின் சிறந்த தரநிலையாகவும் இது பதிவானது.

Tokyo Paralympics 2020 India Full Schedule: இந்திய வீரர்களின் போட்டி அட்டவணை வெளியீடு!

அத்துடன் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது தடகளத்தில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கமாகும். தற்போது அடுத்த கட்டமாக பாராலிம்பிக் போட்டிகள் இன்று முதல் வரும் செப் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட குழு 9 விளையாட்டுகளில் கலந்து கொள்ள உள்ளது. கடந்த பாராலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் நீளம் தூண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இம்முறை இந்திய தேசிய கோடியை ஏந்தி செல்லும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா அறிகுறி தென்பட்டதால் துவக்க விழாவில் அவர் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

WI vs PAK 2வது டெஸ்ட்: விண்டீஸிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!

விராட் கோலி வாழ்த்து:

இந்நிலையில் இதில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அதில் அவர், டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எங்களை பெருமைப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன் என வாழ்த்தி உள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!