ஜூலை 29 டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவிற்கான அட்டவணை நேரம் – தவறாமல் படிங்க!
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஜூலை 29ம் தேதியான நாளை இந்தியாவிற்கான போட்டிகளின் அட்டவணை குறித்து இந்த பதிவில் காண்போம்.
ஒலிம்பிக் போட்டிகள்:
32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடப்பாண்டில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் தற்போது ஜூலை 23ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்நது ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கிறது. இந்த போட்டிகள் கடந்த 2020ம் ஆண்டு நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோரோனா பரவல் பாதிப்புகள் காரணமாக நடப்பாண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இரவு ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிப்பு – மாநில அரசு உத்தரவு!!
கடந்தாண்டு போட்டிகள் நடக்காததால் விளையாட்டு பிரியர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளை பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில், நடப்பாண்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் ஒலிம்பிக் போட்டிகளை அதிக கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் தீவிரமாக நடத்தப்பட்டு, இந்திய வீரர்கள் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ஜூலை 29ம் தேதியான நாளை இந்திய நேரப்படி அட்டவணையை இந்த பதிவில் காண்போம்.
TN Job “FB
Group” Join Now
அட்டவணை நேரம்:
கோல்ஃப்
முதலில் அதிகாலை 4:00 மணிக்கு ஆண்களுக்கான சுற்று 1 கோல்ஃப் போட்டி நடக்க இருக்கிறது. இதில் இந்தியா சார்பாக அனிர்பன் லஹிரி, உதயன் மானே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ரோயிங்
அதிகாலை 5:20 மணிக்கு ஆண்களுக்கான லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் இறுதி சுற்று நடக்கிறது. இதில் இந்திய வீரர்கள் பி – அர்ஜுன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஷூட்டிங்
அதிகாலை 5:30 மணிக்கு 25 மீ பிஸ்டல் பெண்களுக்கான தகுதி துல்லியம் சுற்று போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக மனு பாகர், ரஹி சர்னோபத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஹாக்கி
காலை 6:00 மணிக்கு ஹாக்கி போட்டிகள் இந்தியா மற்றும் அர்ஜென்டினா நாடுகளுக்கு இடையில் நடக்கிறது. இது ஆண்களுக்கான போட்டியாகும்.
பூப்பந்து
காலை 6:15 மணிக்கு பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான பூப்பந்து போட்டிகள் நடக்கிறது. அதில், ஆர் 16 – பி.வி.சிந்து vs மியா பிளிச்ஃபெல்ட் (DEN) ஆகியோர்க்கு இடையிலான போட்டி நாளை நடக்க இருக்கிறது.
வில்வித்தை
காலை 7:31 மணிக்கு ஆண்கள் தனிநபருக்கான வில்வித்தை போட்டிகள் 1/32 எலிமினேஷன்ஸ் – அதனு தாஸ் மற்றும் யு -செங் டெங் (TPE) இடையில் நடக்கிறது.
படகோட்டம்
காலை 8:35 மணிக்கு முதல் சுற்று லேசர் ஆண்களுக்கான ரேஸ் படகோட்டம் போட்டிகள் நடக்க இருக்கிறது. அதில் 7 & 8 – விஷ்ணு சரவணன் (தற்போது 35 இல் 22 வது இடம்) கலந்து கொள்கிறார்.
அதனை தொடர்ந்து காலை 8:35 மணிக்கு முதல் 49er ஆண்களுக்கான படகோட்டம் ரேஸ் 5 & 6 – கணபதி கெலபாண்டா மற்றும் வருண் தாக்கர் (தற்போது 19 இல் 18 வது இடம்) ஆகியோருக்கு நடக்க இருக்கிறது.
காலை 8:45 மணிக்கு முதல் லேசர் ரேடியல் பெண்களுக்கான போட்டிகள் நடக்கிறது. அதில், 7 & 8 – நேத்ரா குமனன் (தற்போது 44 இல் 33 வது இடம்) கலந்து கொள்கிறர்கள்.
பாக்ஸிங்
காலை 8:48 ஆண்கள் பிரிவிற்கான சூப்பர் ஹெவிவெயிட் (+91 கிலோ) போட்டிகள் ஆர் 16 – சதீஷ்குமார் மற்றும் ரிக்கார்டோ பிரவுன் (ஜேஏஎம்) ஆகியோருக்கு இடையில் நடக்கிறது.
மாலை 3:36 மணிக்கு பெண்களுக்கான ஃப்ளைவெயிட் (48-51 கிலோ) போட்டிகள் ஆர் 16 – மேரி கோம் மற்றும் இங்க்ரிட் வலென்சியா (COL) ஆகியோருக்கு இடையில் நடக்கிறது.
ஸ்விம்மிங்
மாலை 4:16 மணிக்கு ஆண்களுக்கான 100 மீ பட்டர்பிளை ஹீட் 2 நீச்சல் போட்டி நடக்க இருக்கிறது. இந்த நீச்சல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சஜன் பிரகாஷ் கலந்து கொள்கிறார்.