Tokyo Olympics Day 10, India Schedule List on August 03 – முழு விபரம் இதோ!
இன்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மன்பிரீத் சிங் தலைமையிலான ஹாக்கி அணி, கிரேட் பிரிட்டனுக்கு எதிரான காலிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் நாளை நடக்கவிருக்கும் போட்டிகள் பற்றிய விவரத்தினை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒலிம்பிக் போட்டிகள்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த முறை கொரோனா பரவலையும் கடந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த முறை ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ மாநகரில் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் சீனா மொத்தமாக 59 பத்தகங்களுடன் முதல் இடத்திலும், அமெரிக்கா 61 பத்தகங்களுடன் இரெண்டாம் இடத்திலும், ஜப்பான் 32 பத்தகங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆகஸ்ட் 4 கடைசி தேதி – ஆட்சியர் அறிவிப்பு!
இந்த பட்டியலில் இந்தியா 1 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கத்துடன் 61வது இடத்தில் உள்ளது. இதனை அடுத்து இன்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் 3-1 என்ற கணக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
நாளை பெல்ஜியம் நாட்டு அணி வீரர்களுடன் அரையிறுதியில் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை நடக்கவிருக்கும் போட்டிகள்
ஆண்கள் (ஹாக்கி) அரையிறுதி:
இந்தியா Vs பெல்ஜியம்
Oi ஸ்டேடியம், காலை 7:00 IST
தடகளம்
பெண்கள் ஈட்டி எறிதல் (தகுதி): குழு A – அன்னு ராணி – 5:50 AM IST
ஆண்களுக்கான ஷாட் புட் (தகுதி): தஜீந்தர்பால் சிங் டூர் – பிற்பகல் 3:45 IST
மல்யுத்தம்
பெண்கள் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ 16வது சுற்று:
சோனம் மாலிக் Vs போலோர்டுயா குரேல்கு
மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ கால் இறுதி:
சோனம் மாலிக் (தகுதி பெற்றால்)
மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ அரையிறுதி:
சோனம் மாலிக் (தகுதி பெற்றால்)