கதிர் கடை திறப்பு விழாவிற்கு வந்த தனம், வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை கூப்பிடும் கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

0
கதிர் கடை திறப்பு விழாவிற்கு வந்த தனம், வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை கூப்பிடும் கஸ்தூரி - இன்றைய எபிசோட்!
கதிர் கடை திறப்பு விழாவிற்கு வந்த தனம், வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை கூப்பிடும் கஸ்தூரி - இன்றைய எபிசோட்!கதிர் கடை திறப்பு விழாவிற்கு வந்த தனம், வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை கூப்பிடும் கஸ்தூரி - இன்றைய எபிசோட்!
கதிர் கடை திறப்பு விழாவிற்கு வந்த தனம், வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை கூப்பிடும் கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கடை திறப்பு விழாவில், கண்ணன் வர பின் தனம் வருகிறார். அதை பார்த்து கதிரும் முல்லையும் சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் கஸ்தூரி ஐஸ்வர்யாவிடம் கதிர் கடைக்கு போகலாமா என கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிர் கடை திறப்பு விழாவிற்கு கண்ணன் வருகிறார். அப்போது கதிர் ஏன் இவ்வளவு நேரம் என கேட்க காலையிலே நான் கிளம்பினால் வீட்டில் எல்லாரும் இங்கே தான் வரேன் என கண்டுபிடித்துவிடுவார்கள் அதனால் தான் நான் லேட்டா வருகிறேன் என சொல்கிறார். பின் கண்ணன் சாப்பிட என்ன இருக்கு என கேட்கிறார். வீட்டில் கொஞ்சமாக தான் சாப்பிட்டு வந்ததாக சொல்லி, கண்ணன் கதிர் முல்லைக்கு கால்குலேட்டரை பரிசாக கொடுக்கிறார். பின் சாப்பிட உட்கார கதிர் முல்லை சாப்பாடு வைக்கின்றனர். பின் தனம் கடை வாசலில் வந்து நிற்கிறார்.

கண்ணன், அவரை பார்த்துவிட்டு இலையை எடுத்து கொண்டு உள்ளே சென்று சாப்பிடுகிறார். பின் தனம் கதிர் கடைக்கு வந்து நீங்க மளிகை பொருள்கள் வாங்கும் போது பருப்பு வாங்காமல் கிளம்பிவிட்டீர்கள் என சொல்கிறார். பின் பருப்பை கொடுக்க வந்ததாக சொல்ல, முருகன் மூர்த்தி முதல் ஆளாக வந்து சாப்பிட்டார் நீ ஏன் இப்படி தயங்குகிறாய் என கேட்கிறார். அப்போது தனம் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் தனம் கொண்டு வந்த பையில் பணம் இருக்கிறது முல்லை அதை பார்த்து சந்தோசப்படுகிறார்.

Exams Daily Mobile App Download

மறுபக்கம் மூர்த்தி வீட்டில் கதிர் கடைக்கு சென்று வந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார். ஐஸ்வர்யா கயலுக்கு சாப்பாடு கொடுக்க ஆனால் கயல் சாப்பிடவில்லை அதனால் ஐஸ்வர்யா வருத்தப்பட மூர்த்தி கயலுக்கு சாப்பாடு ஊட்டி விட்டதை நினைத்து பார்க்கிறார். பின் மீனா வந்து சாப்பிடுறீங்களா என கேட்க மூர்த்தி வேண்டாம் என சொல்கிறார். ஏன் இன்னும் சாப்பிடவில்லை என கேட்கிறார். ஆனால் மூர்த்தி பசிக்கவில்லை என சொல்லி சமாளிக்கிறார். அதன் பின் கஸ்தூரி வீட்டிற்கு வர மூர்த்தி என்ன இந்த பக்கம் என கேட்கிறார்.

கோபி உடைகளை எடுத்து வைத்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

சும்மா தான் வந்ததாக சொல்ல, ஐஸ்வர்யாவிடம் சென்று கதிர் கடையை பார்க்க போகிறேன் நீ வா என சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா நான் எப்படி வருவேன் என கேட்க பாட்டியை பார்க்க வேண்டும் என சொல்லிவிட்டு வா என சொல்கிறார். அப்போது கஸ்தூரி மூர்த்தியிடம் சொல்லிவிட்டு கிளம்ப, ஐஸ்வர்யா நான் பாட்டியை பார்த்து விட்டு வருகிறேன் என சொல்கிறார். அவரும் கிளம்பி செல்ல, கண்ணன் எங்கே என மூர்த்தி கேட்கிறார். அவன் எதோ நண்பனை பார்த்து விட்டு வந்ததாக மீனா சொல்கிறார். அப்போது கண்ணன் வீட்டிற்கு வந்து ஏப்பம் விட மூர்த்தி சந்தேகத்துடன் பார்க்கிறார். பின் மீனா நீ கதிர் கடைக்கு சென்றுவிட்டு வந்தியா என கேட்க, கண்ணன் எதுவும் பேசாமல் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here