தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு:

கோடை காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கடந்த மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய வெப்பநிலை குறித்த அறிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின் படி, 04.03.2024 அன்று முதல் 10.03.2024 அன்று வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ESIC ஆணையத்தில் Senior Resident வேலை – 90+ காலிப்பணியிடங்கள் || நேர்காணலை மட்டுமே!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இப்பகுகளின் அதிகபட்ச வெப்ப நிலையானது 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையாகவும் இருக்க வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழைப்பொழிவு ஏற்படவில்லை. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையான 37.5 டிகிரி செல்சியஸ் கரூர் மாவட்டத்திலும், குறைந்தபட்ச வெப்பநிலையான 16.5 டிகிரி செல்சியஸ் நாமக்கலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையை கருத்தில் கொள்ளும் பொழுது வரும் காலங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என கருதப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!