வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் டிச.8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிச.6ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் டிச.8ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக மழை பெய்யவாய்ப்புள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதே போல டிச.8 அன்று திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்௫புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆதார் அப்டேட் செய்ய கூடுதல் கட்டணம்? பொது மக்களை எச்சரிக்கும் UIDAI!!
டிச.10ம் தேதி இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Exams Daily Mobile App Download
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கீ.மீ முதல் 90 கீ.மீ வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.