தமிழகத்தை புரட்டி போட போகும் கனமழை – வானிலை மையம் தகவல்!

0
தமிழகத்தை புரட்டி போட போகும் கனமழை – வானிலை மையம் தகவல்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தென்மேற்கு வங்கக் கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற தயாரா தேர்வர்களே? – இந்த வழியை முயற்சி பண்ணுங்க!

அடுத்தாக டிசம்பர் 4ம் தேதி புயல் ஆந்திர கடற்கரை அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும். இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இந்த மழையானது அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரைக்காற்று 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல், ஒடிசா கடலோரப் பகுதிகள் வட ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!