வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – இதை மட்டும் செய்யாதீர்கள்!! உங்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

0
வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு - இதை மட்டும் செய்யாதீர்கள்!! உங்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு - இதை மட்டும் செய்யாதீர்கள்!! உங்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – இதை மட்டும் செய்யாதீர்கள்!! உங்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

தற்போதைய கால கட்டத்தில் அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளதால் ஆன்லைன் வாயிலாக முறைகேடுகள் ஏற்படுவது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நெட்டிசன்கள் இதனை மட்டும் செய்யாவே செய்யாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்லைன் மோசடி:

தற்போது அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் சுலபமாக பெற முடிகிறது. இதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஆன்லைன் வாயிலாகவே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். அதனால் ஆன்லைன் முறையில் முறைகேடுகள் ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்த தினமும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை பெற அதிகாரி போன்று தொடர்பு கொள்கின்றனர்.

அத்துடன் இவர்களும் அதிகாரி என நம்பி வங்கி கணக்கு உட்பட அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுகின்றனர். இதன் முடிவில் பாதிக்கப்பட்டவரின் சேமிப்பு பணம் முழுவதும் திருடப்படுகிறது. இந்த ஏமாற்றத்தை தடுக்கும் விதமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பல்வேறு வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அத்துடன் யாரிடமும் நம்பி தங்களின் தனிப்பட்ட விவரங்களை பகிரக்கூடாது எனவும் வாடிக்கையாளர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது, வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இவர்களை ஆன்லைன் மோசடிதாரர்கள் குறிவைத்து தாக்க தொடங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் இது தொடர்பாக வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இமெயில் அனுப்பப்படுகிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்தால் உங்களின் தரவுகள் அனைத்தும் திருடப்பட்டு விடும். அதனால் இது போன்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!