‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ வரை டாப் சீரியல் ப்ரோமோ –  ரசிகர்களின் டாப் கமெண்டுகள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'ரோஜா' வரை டாப் சீரியல் ப்ரோமோ -  ரசிகர்களின் டாப் கமெண்டுகள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'ரோஜா' வரை டாப் சீரியல் ப்ரோமோ -  ரசிகர்களின் டாப் கமெண்டுகள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ வரை டாப் சீரியல் ப்ரோமோ –  ரசிகர்களின் டாப் கமெண்டுகள்!

சின்னத்திரையில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களின் ப்ரோமோவையும், அதற்கான ரசிகர்களின் டாப் கமெண்டுக்களையும் பற்றி இந்த பதிவில் காண்போம்.

ப்ரோமோ:

எப்போதும் டிஆர்பியில் முதல் இடங்களை பிடிப்பது விஜய் டிவி சீரியல்கள் தான். மற்ற சேனல்கள் என்ன தான் புது புது முயற்சிகளை எடுத்து வந்தாலும், விஜய் டிவி சீரியலை மிஞ்ச முடியவில்லை. சீரியல்களின் ஹிட்க்கு முக்கிய காரணமாக இருப்பது முன்னதாக வெளியிடப்படும் ப்ரோமா தான். அந்த ப்ரோமோவிலேயே அன்றைய தினம் தொடர் எப்படி இருக்க போகிறது என்பதை பரபரப்பாக காட்டி விடுகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் ப்ரோமோக்கள் பகிரப்பட்டு வருவதால் ரசிகர்கள் ப்ரோமோவை பார்த்து தங்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டாப் சீரியல்களின் டாப் கமெண்டுகளை காண்போம்.

மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் ITI தொழிற்படிப்பு – நேரடி மாணவர் சேர்க்கை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

கண்ணன் வேலை கேட்டு ஜனார்த்தனன் கடைக்கு வரும் போது, அங்கு ஜனார்த்தனன் கண்னனை திட்டுவது போல் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த ஜனார்த்தனுக்கு வேற வேலையே இல்ல எப்ப பார்த்தாலும் அடுத்தவங்களா குறை சொல்றதே வேலை என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நல்லா கேளுங்க வேலை இல்லாம கல்யாணம் பண்ணா இப்படித்தான இருக்கும்னு புரியவைங்க என்று கூறியுள்ளார்.  வீட்டில் இருப்பவர்களை மதிக்காமல் இப்படி செய்தால் அடுத்தவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் நடுநிலையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர்.

பாக்கியலட்சுமி:

இனியாவின் பள்ளி விழாவில் பாக்கியா கலந்து கொள்வது போல் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரேகா மேடம் நீங்க எங்க இங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படியும் ஜெயிக்கப்போறது பாக்யா அம்மாதா அதுக்கு ஏன் எவ்வளே பில்ட்அப் கொடுக்குறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு  ரசிகர் கலந்துகிட்டா போதும் என்று பாக்யாவை கூட்டி வந்து இப்போ பரிசு வாங்க சொல்லுது இனியா என்று கூறியுள்ளார்.  மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யாவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறியுள்ளனர்.

தமிழக அரசு பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவு – போக்குவரத்து துறை!

பாரதி கண்ணம்மா:

அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பாரதியும், கண்ணம்மாவும் அருகில் அமர்ந்து சாப்பிடுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், பாரதிக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்ததும் கண்ணம்மா வின் சந்தோஷம் அருமை..என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மாவுக்கு கலைமாமணி அவார்ட் கொடுக்கலாம்.. ஆல் ஆக்ட்டிங் சூப்பர் மேட்சிங் என பதிவிட்டுள்ளார். எல்லாமே சரிதான்..மறுபடியும் 8 ஆண்டுகளுக்கு பிறகுன்னு வந்தாலும் வரும் என ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். இப்ப எல்லாம் பாரதி கண்ணம்மா நல்லாத்தான் போகுது… என்று கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ராஜாராணி 2:

சந்தியாவை எப்போதும் போல், சிவகாமி திட்டுவது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சிவகாமிக்கு எப்போவுமே சந்தியா ஆகாத மருமகள் தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன டைரக்டர் சார் எப்போர் பார்த்தாலும் எதாவது ஒரு சண்டைய இழுத்து விடுறீங்க என்று கேட்டுள்ளார். இந்த சீரியல் ஒருநாளும் நல்லா போனதா சரித்திரமே இல்லை என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். எல்லாம் பண்றது அர்ச்சனா ஆனா திட்டு வாங்குறது சந்தியா எப்போதான் இத முடிபீங்க என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ரோஜா:

அனுவின் சதித்திட்டம் படி ரோஜா குடிக்கும் பாலில் எதையோ கலந்து கொடுப்பது போல் ப்ரோமோ காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இது மாதிரி பார்த்து பார்த்து போர்டிச்சுப் போச்சு பா என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்னடா திடீர்னு செண்பகம் ஹல்கா மாறீட்டாங்க என்று கூறியுள்ளார். கொரோனா ஒரு பக்கம் அத விட மோசமா நீங்க பண்ணுறீங்க என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். செண்பகம் உயிரோட இருக்கான்னு தெரிஞ்சா உண்மையிலேயே கோபப்படுறது டைகர் மாணிக்கம் தான் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!