தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

0
தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக நாளை (24.01.2023) தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் குறிப்பிட்ட பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2023: வரி செலுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – வெளியாக இருக்கும் நிதியமைச்சரின் அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!