தமிழகத்தில் மழை கொட்டப்போகுது – மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.05) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து (நவ.5,6) திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நவ.7ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், விருதுநகர் சிவகங்கை, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
நவ.16 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இது தான்!
மழையானது நவம்பர் 11ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொருத்தவரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கேரளா – தெற்கு கர்நாடகா மற்றும் லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் வீசப்படும் என்பதால் மீனவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.