தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை:
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.02) சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை (நவ.03) நீலகிரி திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் இலவச தீபாவளி பரிசு – கூட்டுறவு சங்கம் திட்டம்!
அடுத்ததாக நவம்பர் 4, 5, 6, 7 ஆகிய தினங்களில் மேற்கண்ட மாவட்டங்களை தொடர்ந்து தர்மபுரி, சேலம் திருப்பத்தூர், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் கனமழை தொடரும் எனவும் சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.