தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு !!!

0
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு !!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு !!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு !!!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்:

  1. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1372 பேர்
  2. இதுவரை உயிர் இழந்துள்ளவர்களின் எண்ணிக்கை – 15 பேர்
  3. இதுவரை குணமடைந்து உள்ளவர்களின் எண்ணிக்கை – 365 பேர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இறப்பு சதவீதமும் 1.1% ஆகவே உள்ளதால், வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு புது நம்பிக்கை பிறந்து உள்ளது.

கொரோனவை அடியோடு கொல்லும் கிருமிநாசினி தயாரிப்பு – அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அசத்தல்..!

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 7, தென்காசியில் 4, பெரம்பலூர் மற்றும் திண்டுக்கலில் தலா 3 பேருக்கும் வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

கொரோனாவுக்கு வந்தாச்சு தடுப்பு மருந்து – அமெரிக்கா மருத்துவ குழு அதிரடி.!
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!