தமிழகத்தில் திடீரென உயரும் ஆபரணத்தங்கத்தின் விலை – இன்னைக்கு என்ன நிலவரம்.. விவரம் இதோ!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆபரணத்தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நேர நிலவரம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் தீபாவளி பண்டிகைகள் வர உள்ள நிலையில் ஆபரணத் தங்கத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது. பொதுவாகவே பண்டிகை தினங்களில் மக்கள் புதிய தங்க அணிகலன்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பிப்பர். இத்தகைய சூழலில் அதன் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் (நவ.04) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 45,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் குறைந்த விலையில் பெரிய வெங்காய – அரசின் அசத்தலான நடவடிக்கை!
அதே போல ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,715-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. அதே போல வெள்ளியின் விலை ரூ.78-க்கும் கிலோ ரூ. 78,000-க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.