தமிழகத்தில் இன்று மழை பொழிவுக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய தகவல்!

0

தமிழகத்தில் இன்று மழை பொழிவுக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையமானது இன்று காலை தமிழகத்தில் மழை பொழிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

வானிலை மைய தகவல்:

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை எச்சரித்து இருந்தது. இந்நிலையில் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாத நிலை – பொதுமக்கள் அதிர்ச்சி!

வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்று விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழைப்பொழிந்து வெப்பத்தை தணித்து உள்ளது. மேலும் தற்போது இருந்தே மக்கள் கத்தரி வெயில் சமயங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று அச்சப்படத் தொடங்கியுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!