சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

0
சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!
சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!
சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

தமிழகத்தில் இன்று அக்டோபர்-12 நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை நேற்றிலிருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை நிலவரம்:

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாகவே பெட்ரோல், டீசல் விலையானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயித்து வருகின்றன. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது இன்று விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் காணப்படுகிறது. அதாவது நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் இன்று விற்பனை செய்யப்படுகிறது. இன்று மும்பையில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.110.41 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.101.03 க்கும், டெல்லியில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.104.44 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.93.17 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

மேலும், கொல்கத்தாவில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.105.09 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.96.28 க்கும், பெங்களூரில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.108.08 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.98.89 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து நேற்று சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.79 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 97.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று அக்டோபர் 12 நேற்றைய விலையிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம் – மத்திய அமைச்சர்கள் ஆலோசனை!

இன்று விலையில் உயர்வு இல்லாதது சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தாலும் தற்போதைய விலை என்பது அதிகமாக இருப்பது வாகன ஓட்டிகளுக்கு சற்று வருத்தத்தை தான் அளித்து வருகிறது. எனினும் நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலையை ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகத்தில் சற்று குறைவாக தான் விலை நிலவரம் உள்ளது. இதற்கு தமிழக அரசு பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்தது ஒரு காரணமாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!