மல்லி வந்ததை சொல்லி சண்டை போடும் மீனா & ஐஸ்வர்யா, கடையில் இருந்து வந்த தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மல்லி வந்ததை சொல்லி சண்டை போடும் மீனா & ஐஸ்வர்யா, கடையில் இருந்து வந்த தனம் - இன்றைய
மல்லி வந்ததை சொல்லி சண்டை போடும் மீனா & ஐஸ்வர்யா, கடையில் இருந்து வந்த தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மல்லி வந்ததை சொல்லி சண்டை போடும் மீனா & ஐஸ்வர்யா, கடையில் இருந்து வந்த தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா மல்லியிடம் பேசியது பற்றி ஐஸ்வர்யா கேட்டு சண்டை போடுகிறார். பின் தனம் வந்து மீனா ஐஸ்வர்யாவை சண்டை போடாமல் இருக்க கெஞ்சுகிறார். பின் அக்கம் பக்கத்தினர் குடும்பத்தில் சண்டையாக இருப்பதாக சொல்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் இளநீர் வாங்க செல்ல அப்போது சில்லறை இல்லாமல் இருக்கிறார். அப்போது கதிர் வந்து சில்லறை கொடுத்து வாங்கி கொடுக்கிறார். பின் தனம் எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறார். மறுபக்கம் மீனா துணி துவைத்துக் கொண்டிருக்க ஐஸ்வர்யா வந்து மல்லியிடம் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என கேட்கிறார். யாருக்கு பொண்ணு பார்க்க நீங்க யார் என கேட்க உனக்கு என்ன என மீனா கேட்கிறார். பின் மீனா எனக்கும் அவங்க சொந்தம் தான் நான் அவர்களிடம் பேசினால் உனக்கு என்ன என கேட்கிறார்.

Exams Daily Mobile App Download

பின் ஐஸ்வர்யா அவங்க எனக்கு தான் சொந்தக்காரர் என சொல்ல, அவன் நல்ல பையனாக இருக்கிறான் அதனால் தான் என மீனா சொல்கிறார். ஐஸ்வர்யா என்னை அவமானப்படுத்தியால் தான் பேசினேன் என சொல்ல, மீனா நீ செய்தது உனக்கே அவமானமாக இருக்கிறதா ஓடி போய் கல்யாணம் செய்தவள் தான என சொல்ல, ஐஸ்வர்யா நீங்களும் ஓடி போனவங்க தான என சொல்கிறார். அப்போது மூர்த்தி வந்து நம்ம குடும்பத்தில் இவ்வளவு சண்டையா எப்படி இருந்த குடும்பம் ஆனால் இப்போது எப்போ பார்த்தாலும் சண்டை என சொல்கிறார்.

இனிமேல் பார்த்து ஒழுங்காக இருங்கள் என சொல்ல மீனாவிடம் ஐஸ்வர்யா தான் சின்ன பொண்ணு நீ கொஞ்சம் பொறுத்து போனால் என்ன என கேட்கிறார். பின் மீனா சாரி கேட்கிறார். அதன் பின் மூர்த்தி சென்றுவிட ஐஸ்வர்யாவிடம் இவ்வளவு நாள் இந்த குடும்பத்தில் என்னை மாமா எதுமே சொன்னது இல்லை, உன்னால் தான் எல்லாம் என சொல்ல, ஐஸ்வர்யா அதான் மாமா புத்தி இருக்கா என கேட்டு போனாங்களே இனிமேல் புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள் என சொல்ல உடனே மீனாவிற்கு கோவம் வந்து மறுபடியும் சண்டை வருகிறது. கண்ணன் தடுத்து நிறுத்த ஆனால் முடியவில்லை. பின் கண்ணன் தனத்திற்கு போன் செய்து சொல்கிறார்.

தமிழகத்தில் நாளை ஜூலை 26ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மல்லி வந்த பின் இவங்க இருவரும் சண்டை போடுறாங்க அண்ணன் சொல்லி கூட கேட்கவில்லை என சொல்கிறார். பின் நான் உடனே வரேன் என தனம் ஜீவாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். தனம் வர கண்ணனிடம் அவங்களுக்கு என்ன தான் பிரச்சனை என கேட்கிறார். பின் மூர்த்தி தனத்திடம் இவங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார். முல்லை வீட்டில் இருந்த போது இப்படியா என கேட்க முல்லை இப்படி எல்லாம் செய்யமாட்டார் என தனம் சொல்கிறார். மூர்த்தி இங்கே நடப்பதை பார்ப்பதற்கு நான் கடைக்கே வந்துவிடலாம் போல என சொல்கிறார்.

பின் கண்ணன் அண்ணன் சொல்வது சரி தான் இருவரும் அப்படி சண்டை போடுவதாக சொல்ல, ஐஸ்வர்யா வந்து என்ன அக்கா இந்த நேரத்தில் வந்து இருப்பதாக கேட்கிறார். தனம் ஏன் சண்டை போடுறீங்க என கேட்க நான் இல்லை மீனா அக்கா தான் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் மீனா வந்து நான் எதுவும் செய்யவில்லை நான் மல்லியிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு இவ தான் சண்டை போடுவதாக சொல்கிறார். பின் மீனா அவளுக்கு குற்ற உணர்ச்சி என சொல்ல ஐஸ்வர்யா மீண்டும் சத்தம் போடுகிறார்.

மீனா நான் பொண்ணு பார்க்கவா என தான் கேட்டேன் என சொல்ல மீண்டும் தனம் முன்னிலையில் சண்டை போடுகின்றனர். அவர்களை நிறுத்த முடியாமல் தனம் நிறுத்துங்க என சொல்கிறார். தனம் மீனாவிடம் நீ ஏன் பொண்ணு பார்க்க வேண்டும் என கேட்க மீனா அவங்க தான் பொண்ணை பற்றி பேசினார்கள் என சொல்கிறார். ஏற்கனவே வெளி ஆட்களால் பிரச்சனை வந்து கதிர் வீட்டை விட்டு கிளம்பிவிட்டார். அது போல ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் மாமா 1 மாதம் மட்டும் நிம்மதியாக இருக்க வேண்டும் என தனம் சொல்ல மீனா ஐஸ்வர்யா மன்னிப்பு கேட்கின்றனர்.

மாமா ஒரு மாதம் கடைக்கு போகும் வரை நீங்க கொஞ்சம் அமைதியாக இருங்க அங்கே கடையில் கூட என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என சொல்ல, இனிமேல் இப்படி நடக்காது என மீனா சொல்கிறார். ஐஸ்வர்யா கண்ணனிடம் அக்காவை ஏன் கூப்பிட்டாய் என கேட்க நீங்க போட்ட சண்டையில் நான் பயந்துவிட்டேன் என கண்ணன் சொல்கிறார். பின் பாண்டியன் அழ தனம் நீங்க சண்டை போடாமல் இருந்தால் போதும் என பாண்டியனை அழைத்து கொண்டு செல்கிறார். பின் அக்கம் பக்கத்தினர் வந்து தனத்திடம் என்ன ஒரே சத்தம் என கேட்க பாண்டியன் கயல் அழுவதாக சொல்லி சமாளிக்கிறார்.

ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் மீனா ஐஸ்வர்யா குரல் தான் கேட்கிறது. முன்னாடி எல்லாம் நீ முல்லை மீனா இருக்கும் போது சத்தமே கேட்காது. ஆனால் இவர்கள் இருவரும் இருந்தால் ஒரே சத்தமாக இருக்கிறது என சொல்ல அவங்க குரல் சத்தமாக இருக்கும் என தனம் சொல்கிறார். ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதாக சொல்ல, இந்த தெருவில் சண்டை போடாத வீடு உங்க வீடு தான் எல்லாம் லட்சுமி அம்மா இருக்கும் வரை இருந்தது ஆனால் இப்போது எதுவும் இல்லை இந்த சண்டையால் தான் கதிர் வீட்டை விட்டு சென்றார்.

தனம் பேச்சை அவர்கள் கேட்கமாட்டார்கள் என சொல்கிறார்கள். உடனே தனம், ஐஸ்வர்யா இப்போது தான் வந்திருக்கிறாள் சீக்கரம் புரிந்து கொள்வாள். கதிரும் சீக்கரம் வந்துவிடுவான் என சொல்ல, உடைந்த உறவு ஒட்டுவதற்கு வாய்ப்பில்லை என சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். பின் கண்ணன் நீங்க எதுவும் மனதில் வைத்து கொள்ளாதீர்கள் என சொல்கிறார். மல்லி அம்மா வீட்டிற்கு வர கதிர் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என் தங்கச்சிக்கு இப்படி ஒரு நிலைமையா என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!