தமிழகத்தில் இன்று (ஜூலை 18) தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் இன்று (ஜூலை 18) தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் இன்று (ஜூலை 18) தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் இன்று (ஜூலை 18) தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து இன்று குமரி மாவட்டத்தில் இயங்கும் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்னும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து பள்ளி தரப்பில் இருந்து பெற்றோருக்கு விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது மாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா என்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மரணத்திற்கு நீதி வேண்டி உறவினர்களும், போராட்டக்காரர்களும் பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்திற்கு தீ வைத்தனர். இதனால் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்தன. மேலும் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினர். போலீசார் மற்றும் போராட்டக்காரரர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி சம்பள உயர்வு!

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறையை கண்டித்து 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் மழலையர் மற்றும் ஆங்கில பள்ளிகள் சங்கம் சார்பில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இது போன்று தனியார் பள்ளிகளில் மாணவிகள் இறப்பது அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் ஒரு வகையான பதற்றம் நிலவுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here