தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்!

2
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இன்றே கடைசி நாள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இன்றே கடைசி நாள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் கடைகளில் ரூ.4000 இரு தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் மாத தவணை ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் பெற இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மே 10 முதல் முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாடு அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் துவக்கம் – பொதுமக்களுக்கு அனுமதி!

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு ரூ.4000 கொரோனா நிவாரணம் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. அதன் முதல் தவணை தொகை ரூ.2000 மே மாதமே வழங்கப்பட்டது. மேலும் கொரோனா இரண்டாம் தொகை ரூ.2000 ஜூன் மாதம் வழங்கப்படும் எனவும், அத்துடன் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் ‘கல்பனா சாவ்லா’ விருது 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த திட்டத்தை ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் அன்று முதல்வர் தொடங்கி வைத்தார். ஜூன் 15 முதல் இதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. மக்கள் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை கடைபிடித்து ரேஷன் கடைகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் சென்று 14 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண தொகை ரூ.2000 பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.2000 மற்றும் மளிகைப் பொருட்கள் பெற இன்று கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Very good news. But I am jobless, pensionless. I am sixty five years old. Despite of highly qualified no body offering job to utilise my brain power & service. I am servicing without money and to feed two daughters & I am trying my best. Please kindly offer me a job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!