தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (செப்.01) விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (செப்.01) விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (செப்.01) விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (செப்.01) விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது பருவமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 01) 4 மாவட்டங்களுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை விடுமுறை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை இடி மற்றும் மின்னலுடன் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அளித்து வருகிறது.

அந்த வகையில் இன்று பரவலாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்த மதிப்பெண் போட்ட பள்ளி ஆசிரியரை மரத்தில் கட்டிய மாணவர்கள் – அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!

இதனை அதிகாரப்பூர்வமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தியால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here