கோபியால் பாக்கியாவை வெறுக்கும் குடும்பத்தினர், நொந்து போன பாக்கியா – வெளியான ப்ரோமோ!

0
கோபியால் பாக்கியாவை வெறுக்கும் குடும்பத்தினர், நொந்து போன பாக்கியா - வெளியான ப்ரோமோ!
கோபியால் பாக்கியாவை வெறுக்கும் குடும்பத்தினர், நொந்து போன பாக்கியா - வெளியான ப்ரோமோ!
கோபியால் பாக்கியாவை வெறுக்கும் குடும்பத்தினர், நொந்து போன பாக்கியா – வெளியான ப்ரோமோ!

கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியேற்றியதால் மொத்த குடும்பமும் பாக்கியாவை குறை சொல்லுகின்றனர். இதனால், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தடுமாறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா மீண்டும் ஏற்றுக்கொள்ள போகிறாரா அல்லது கடைசி வரைக்கும் ராதிகாவை ஏற்றுக்கொள்ள சொல்லி கோபி கெஞ்சி கொண்டே தான் இருக்க போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வந்ததும் பாக்கியா மிகவும் மனமுடைந்து துன்பப்படுவார் என எதிர்பார்த்த நேரத்தில் தற்போது தான் பாக்கியா மிகவும் துணிச்சலாக முடிவெடுத்துள்ளார்.

அதாவது, நான் அவருக்கு எல்லா விதமான அன்பையும் கொடுத்துவிட்டேன். ஆனாலும், ராதிகாவை தேடி சென்றுவிட்டார். இதற்கு பிறகு ஒரு நிமிடம் கூட கோபியுடன் சேர்ந்து வாழவே கூடாது என கோபிக்கு பாக்கியா விவாகரத்து கொடுத்துவிட்டார். இது மட்டுமல்லாமல் இந்த வீட்டில் கோபிக்கு இடமில்லை என கூறி கோபியை வீட்டை விட்டே வெளியேற்றிவிட்டார். குடும்பத்தினர்கள் எவ்வளவோ பாக்கியாவிடம் சொல்லியும் பாக்கியா கேட்பதாக தெரியவில்லை. மேலும், கோபி எப்படியும் ராதிகாவை தேடி தான் செல்வார். பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருந்தால் கோபியின் மனதை மாற்றியிருக்கலாம் என ஈஸ்வரி பாக்கியா மீது கோவப்படுகிறார்.

திருமணத்திற்கு முன்பே தாயாகும் வெண்பா, பாரதி தான் அப்பாவா? – சீரியலில் திடீர் திருப்பம்!

Exams Daily Mobile App Download

ஈஸ்வரி மட்டுமல்லாமல் இனியா, செழியன் என அனைவருமே பாக்கியா செய்தது தவறு என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரி நினைத்ததை போலவே கோபி நேராக ராதிகாவை சந்திக்க செல்கிறார். அங்கு ராதிகாவிடம் நடந்த அனைத்து விஷயத்தையும் பற்றி விளக்கமாக கூறுகிறார். ஆனாலும், ராதிகா மனசு மாறுவதாக தெரியவில்லை. பின்னர், ராதிகாவின் வீட்டிற்கு ஈஸ்வரியும் வந்து ராதிகாவிடம் சண்டை போடுகிறார். இதற்கு பிறகும் ராதிகா கோபியை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here