தமிழகத்தில் இன்று (அக். 25) சூரியகிரகணம் – வெறும் கண்களால் பார்க்கலாமா? முழு தகவல் இதோ!

0
தமிழகத்தில் இன்று (அக். 25) சூரியகிரகணம் - வெறும் கண்களால் பார்க்கலாமா? முழு தகவல் இதோ!
தமிழகத்தில் இன்று (அக். 25) சூரியகிரகணம் - வெறும் கண்களால் பார்க்கலாமா? முழு தகவல் இதோ!
தமிழகத்தில் இன்று (அக். 25) சூரியகிரகணம் – வெறும் கண்களால் பார்க்கலாமா? முழு தகவல் இதோ!

தமிழகத்தில் இன்று (அக் 25) சூரிய கிரகணம் நடைபெறவுள்ள நிலையில் சூரிய கிரகணம் வரும் நேரம் குறித்தும், மக்கள் வெறும் கண்ணில் பார்க்கலாமா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரிய கிரகணம்:

ஆண்டுதோறும் இரு முறை சூரிய கிரகணம் தோன்றும். பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் சூரியகிரகணம் என அழைக்கின்றனர். தமிழகத்தில் இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி சூரியகிரகணம் வந்தது. அதன் பின் இன்று ( அக். 25) சூரியகிரகணம் வர இருக்கிறது. அதன் பின் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி 2027 ஆம் ஆண்டு இது போல சூரியகிரகணம் வரும். இந்நிலையில் சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படும்.

அதனால் சூரியன் சில நேரங்களுக்கு மறைக்கப்படும். தமிழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு சூரியகிரகணம் வரும். ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும். உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 மணிக்கு தொடங்கி 18:32 மணிக்கு வரை இருக்கும், மேலும் ரஷ்யாவில் சூரியனை சந்திரன் 80 சதவிகிதம் மறைக்கும்.

சமையல் போட்டியில் கலந்து கொள்ள சொல்லி கெஞ்சும் முல்லை, பிடிவாதம் பிடிக்கும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இந்தியாவில் இன்று மாலை 5.30 மணிக்கு முழு சூரியகிரகணம் வரும். இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் இருக்கும். குஜராத் மாநில துவாரகாவிலும், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலும் அதிகபட்சமாக சூரியகிரகணம் தோன்றும். மும்பை, புனே, தானே, டெல்லி, ஆமதாபாத், சூரத், ஜெய்பூர் இந்தூர், போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜெய்ன், மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரம் சூரிய கிரகணம் இருக்கும். இந்த சூரியகிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்ணில் பார்க்க கூடாது. அவ்வாறு பார்க்க நினைத்தால் கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்து பார்க்கலாம். சென்னையில் 5.14 மணிக்கு தொடங்கி 5.50 மணிக்கு சூரியகிரகணம் வரும். ஆனால் 8 சதவிகிதம் மட்டுமே தென்படும், மேலும் சூரியகிரகணம் நிகழும் போது, குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!