ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென சரிவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென சரிவு - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென சரிவு - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென சரிவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடி சரிவை கண்டுள்ளது. தற்போது இன்றைய தங்கத்தின் நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு இறக்குமதிக்கான வரியை உயர்த்தியதை தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து இதன் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 24ம் தேதி அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.39,448-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் நேற்று சவரனுக்கு ரூ.32 அதிகரித்து சவரனுக்கு 39,480 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது.

2023ம் ஆண்டில் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் தான்.. கொட்டி கிடைக்கும் வேலை வாய்ப்புகள் – விவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.4,925க்கு விற்பனையாகிறது. இதே போல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.39,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ஒரு கிராம் ரூ.67.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!