சென்னையில் ஆபரண தங்கம் அதிரடி சரிவு – குஷியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?

0
சென்னையில் ஆபரண தங்கம் அதிரடி சரிவு - குஷியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரண தங்கம் அதிரடி சரிவு - குஷியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரண தங்கம் அதிரடி சரிவு – குஷியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது. தற்போது இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கத்தின் விலை கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பண்டிகை நாட்கள், முக்கியமான நாட்களில் தங்கத்தின் விலை புதிய புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அதிரடியாக தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு – தமிழகத்தில் நாளை ‘இந்த’ கல்லூரியில் பணி வாய்ப்புக்கான நேர்காணல்!

Follow our Instagram for more Latest Updates

அதன்படி தங்கத்தின் விலை கடந்த 12ம் தேதி அன்று கிராமுக்கு ரூ. 5,236க்கும், இதே போல் சவரனுக்கு ரூ. 41,888க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து படிப்படியாக தங்கத்தின் விலை உயர்ந்து நேற்று கிராமுக்கு ரூ. 5,325க்கும் மற்றும் சவரனுக்கு ரூ.42,600க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று நகைப்பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக தங்கம் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ.ரூ. 5,320க்கு விற்பனையாகிறது. இதே போல் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.30க்கும், அத்துடன் ஒரு கிலோ வெள்ளி ரூ.74300க்கும் விற்பனையாகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!