நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 10, 2020

2
10th March 2020 Current Affairs 2020 Tamil
10th March 2020 Current Affairs 2020 Tamil

தேசிய செய்திகள்

ஸ்ரீ பிரஹ்லாத் சிங் படேல் 2020 மார்ச் 11 அன்று “ஜலியன்வாலா பாக்” கண்காட்சியைத் தொடங்கவுள்ளார்

இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் 130 வது அறக்கட்டளை தினத்தை முன்னிட்டு, மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் , ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல் “ஜல்லியன்வாலா பாக்” கண்காட்சியை 11 மார்ச் 2020 அன்று மாலை 5.00 மணிக்கு தேசிய காப்பக வளாகத்தில் திறந்து வைக்க உள்ளார்

  • இந்திய தேசிய ஆவணக்காப்பகம் கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் அலுவலகமாகும். இது மார்ச் 11, 1891 அன்று கொல்கத்தாவில் நிறுவப்பட்டது.

டாக்டர் ஹர்ஷ் வர்தன் தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனத்தின்(NIHFW) 43 வது ஆண்டு தினத்திற்கு தலைமை தாங்கினார்

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மார்ச் 9 அன்று தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் 43 வது ஆண்டு தினத்திற்கு தலைமை தாங்கினார்.

  • நேர்மறையான ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு பொது சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மையங்களின் பங்கை இந்த கூட்டம் வலியுறுத்தியது.

சர்வதேச செய்திகள்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அஷ்ரப் கானி இரண்டாவது முறையாக பதவியேற்றார்

காபூலில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அஷ்ரப் கானி இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

  • இந்த பதவிக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது.

மாநில செய்திகள்

போஷன் அபியான் திட்டத்தை ஒட்டுமொத்தமாக செயல்படுத்திய மாநிலங்களில் ஆந்திரா முதலிடம்

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண 2017 டிசம்பர் 18 முதல் தேசிய ஊட்டச்சத்து மிஷன் என்று அழைக்கப்பட்ட போஷன் அபியனை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

  • நிதி ஆயோக் சமீபத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையின்படி, போஷன் அபியான் ஒட்டுமொத்தமாக செயல்படுதிய ஆந்திர மாநிலம் நாட்டில் முதல் இடத்தைப் பிடித்தது.
  • போஷன் அபியனின் குறிக்கோள்கள் 0-6 வயது முதல் குழந்தைகள், இளம் பருவ பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதே ஆகும்.

அதிக எண்ணிக்கையிலான சூரிய கூரைகள் (Solor Rooftop) நிறுவி குஜராத் முதலிடத்தில் உள்ளது

நாடு முழுவதும் சூரிய கூரைகள் நிறுவுவதில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி இலக்குகளை அடைவதற்காக அம்மாநில அரசு அர்ப்பணிப்பு திட்டங்களை எடுத்துள்ளது.

  • குஜராத்துக்குப் பிறகு, மகாராஷ்டிரா 5,513 க்கும் மேற்பட்ட சூரிய கூரை நிறுவல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான துறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கிறது

முதலமைச்சர் நவீன் பட்நாயக், “மிஷன் சக்தி” என்று பெயரிடப்பட்ட சுய உதவிக்குழுக்களுக்காக தனித் துறையை நிறுவினார். இது பெண்களின் வளர்ச்சிக்காக அம்மாநில அரசால் உருவாக்கப்பட்டது

  • மிஷன் சக்தி மற்றும் மம்தா திட்டம் இணைந்து 70 லட்சம் பெண்களுக்கு பயனளிக்கிறது

கோவா பஞ்சாப் எனும் மொபைல் செயலியை பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியது

பஞ்சாபின் தலைமைச் செயலாளர் கரண் அவ்தார் சிங் கோவா பஞ்சாப் என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். கோவா என்பது கொரோனா வைரசை குறிக்கிறது.

  • இந்த பயன்பாட்டை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையுடன் கலந்தாலோசித்து அரசாங்க சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகளை திர்க மக்களுக்கு வழங்கப்பட்டது.

தரவரிசைகள்

ஸ்டாக்ஹோம் சர்வதேச அறிக்கை: ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்  சமீபத்தில் “சர்வதேச ஆயுதப் பரிமாற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உள்ளது.

  • உலகின் முதல் 5 ஆயுத இறக்குமதியாளர்களில் சவுதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகியவை அடங்கும் என்று அறிக்கை கூறுகிறது. இந்த 5 நாடுகளும் உலக ஆயுத இறக்குமதியில் 36% சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்கின்றனர்.

வணிக செய்திகள்

மூடிஸ் 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 5.3% ஆக குறைத்துள்ளது

தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ்  இந்தியாவுக்கான அதன் வளர்ச்சி கணிப்புகளை 2020 ஆம் ஆண்டில் 5.4 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக குறைத்துள்ளது, ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் உலகளவில் வளர்ச்சியை பாதிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

நியமனங்கள்

நுபூர் குல்ஷ்ரேஸ்தா இந்திய கடலோர காவல்படையின் முதல் பெண் டி.ஐ.ஜி ஆக பொறுப்பேற்றார்

இந்திய கடலோர காவல்படையின் டி.ஐ.ஜி ஆக பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணி நூபூர் குல்ஷ்ரேஸ்தா ஆவர்.  அவர் 1999 இல் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார்.

விளையாட்டு செய்திகள்

எம்.சி மேரி கோம் உட்பட மூன்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்

ஆறு முறை உலக சாம்பியனான எம்.சி மேரி கோம் ஜோர்டானில் அம்மானில் நடந்த ஆசிய தகுதிச் சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இவருடன்  இந்திய குத்துச்சண்டை வீரர்அமித் பங்கலும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

பிற செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஹான்ஸ் ராஜ் பரத்வாஜ் காலமானார்

முன்னாள் சட்ட அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹான்ஸ் ராஜ் பரத்வாஜ் காலமானார்.

  • ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ் ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள காரி சம்பா கிராமத்தில் பிறந்தார்.
  • ஏப்ரல் 1982 முதல் ஜூன் 2009 வரை ஐந்து பதவிகளுக்கு அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
  • 2009 ல் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

CPIM எம்எல்ஏ என் விஜயன் பிள்ளை 65 வயதில் காலமானார்

சாவரா தொகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.எல்.ஏ என் விஜயன் பிள்ளை கொச்சியில்  காலமானார்.

  • அவர் கொல்லம் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகவும், கொல்லம் கூட்டுறவு மாவட்ட வங்கியின் துணைத் தலைவராகவும், கொல்லம் மாவட்ட மனித வள கூட்டுறவு சங்கத் தலைவராகவும் 2000 முதல் 2005 வரை பணியாற்றினார்

Download Today Complete CA in Tamil

CA One Liners in Tamil

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!