வருடங்கள் கழித்து வெளியான குட் நியூஸ்.. பலி எண்ணிக்கை ஜீரோ – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

0
வருடங்கள் கழித்து வெளியான குட் நியூஸ்.. பலி எண்ணிக்கை ஜீரோ - இந்தியாவில் கொரோனா நிலவரம்!
வருடங்கள் கழித்து வெளியான குட் நியூஸ்.. பலி எண்ணிக்கை ஜீரோ - இந்தியாவில் கொரோனா நிலவரம்!
வருடங்கள் கழித்து வெளியான குட் நியூஸ்.. பலி எண்ணிக்கை ஜீரோ – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.

கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல கோடிக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடு, தடுப்பூசி மருந்து காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 4,46,62,141 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனாவால் உயிர் சேதங்கள் ஏதும் நாட்டில் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கிறது. இதுவரை நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30452 ஆக உள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு..தமிழகத்தில் நவ. 10 மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள்!

Exams Daily Mobile App Download

மேலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 1,43,638 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 14,021 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாட்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,17,611 ஆக அதிகரித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!