அதிர்ச்சி தகவல்.. முன்பை விட அதிக திறன் கொண்ட கொரோனா – சீனாவில் கண்டுபிடிப்பு!

0
அதிர்ச்சி தகவல்.. முன்பை விட அதிக திறன் கொண்ட கொரோனா - சீனாவில் கண்டுபிடிப்பு!
அதிர்ச்சி தகவல்.. முன்பை விட அதிக திறன் கொண்ட கொரோனா - சீனாவில் கண்டுபிடிப்பு!
அதிர்ச்சி தகவல்.. முன்பை விட அதிக திறன் கொண்ட கொரோனா – சீனாவில் கண்டுபிடிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவின் முதல், இரண்டாம் மற்றும் அலைகள் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மற்றொரு வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

அதிவேக வைரஸ்:

சீனாவில் முதன் முதலில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலக நாடுகள் முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரஸானது கட்டுக்கடங்காமல் முன்பை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உருமாற்றம் அடைகிறது. இதையடுத்து தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் முதல் அலையின் தாக்கம், இரண்டாம் அலையின் தாக்கம் இதையடுத்து 3ம் அலையின் தாக்கம் என பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி மருந்துகள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவது இன்னும் முடிவடையவில்லை. அதாவது தற்போது ஒமைக்ரான் வைரசின் மாறுபாடு அடைந்த 2 புதிய வகை மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி ‘பிஎப்.7 மற்றும் பிஏ.5.1.7’ என்ற புதிய வகை ஓமைக்ரான் வைரஸானது முன்பை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக பரவி வருகிறது. அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸானது சீனாவின் பல மாகாணங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – எங்கெங்கு தெரியுமா?

Exams Daily Mobile App Download

மேலும் ‘பிஎப்.7 மற்றும் பிஏ.5.1.7’ வகை மாறுபாடுகள் நோய் எதிர்ப்பு சக்தியை சுலபமாக உடைத்தெறிந்து பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இதற்கு முன்பாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்தியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த வைரஸ் தொற்று பரவலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுவரை பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பிஎப்.7 என்ற வைரஸானது அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் பிஎப்.7 வகை மாறுபாடு உலகம் முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!