பிக் பாஸ் இன்றைய எபிசோடில் கமலின் விஸ்வரூபம் – தப்பை தட்டி கேக்க களமிறங்கிய ஆண்டவர்!

0
பிக் பாஸ் இன்றைய எபிசோடில் கமலின் விஸ்வரூபம் - தப்பை தட்டி கேக்க களமிறங்கிய ஆண்டவர்!
பிக் பாஸ் இன்றைய எபிசோடில் கமலின் விஸ்வரூபம் - தப்பை தட்டி கேக்க களமிறங்கிய ஆண்டவர்!
பிக் பாஸ் இன்றைய எபிசோடில் கமலின் விஸ்வரூபம் – தப்பை தட்டி கேக்க களமிறங்கிய ஆண்டவர்!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவில் சூடான விவாதங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. விவாதம் முற்றி அடிதடி எதுவும் நடந்து விடுமோ என்று ரசிகர்களே அச்சப்படும் அளவிற்கு சில சம்பவங்கள் இந்த சீசனில் நடந்துள்ளது.

பிக் பாஸ் கமல்:

பிக் பாஸ் சீசன்களில் இதுவரை பல வாக்குவாதங்கள் நடந்துள்ளது. ஆனால் அவை எல்லாம் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட பாதி நாட்களை கடந்த நிலையிலும், இறுதி கட்ட போட்டிகளின் போது தான் நடக்கும். ஆனால் கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் முதல் வாரத்தில் இருந்தே அனல் பறக்கிறது. இது போன்ற சண்டைகள் நடந்துள்ள வாரத்தின் இறுதி நாளில் அந்த பிரச்சனை குறித்த கமலின் ரியாக்சனை எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏராளமானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ சில நிமிடங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அதில், கமல் தப்பு செய்கிறவர்களுக்கு, அது தப்பு என்பதை யாரும் சொல்லாதவரை, தான் செய்வது தவறு தான் என்று யாருக்கும் தெரியாது என்றும், தான் தப்பை தட்டி கேட்க தான் வந்திருப்பதாகவும் சூசகமாக சொல்வது போல் உள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரதிர்ச்சியை கொடுத்த DNA டெஸ்ட் ரிசல்ட்., கதறி அழுது கண்ணம்மாவின் காலில் விழுந்த பாரதி!

Exams Daily Mobile App Download

அதாவது, டாஸ்கில் அஜீம் மற்றும் ஆயிஷா இடையில் நடந்த வாக்குவாதம் மிகவும் மோசமாக இருந்தது. அஜீம் சக போட்டியாளர் என்ற மரியாதை கூட இல்லாமல் ஆயிஷாவை பல முறை வாடி, போடி என்றும், அப்படி தான் டி என்று சொல்லுவேன் என்றும் சொன்னார். பல முறை அப்படி சொல்லாதீங்க என்று கூறிய ஆயிஷா இறுதியாக தனது செருப்பை கழட்டி அஜீமை அடிக்க சென்றார். இந்த சண்டை மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் இருந்தது. இதனால் இதை குறித்து தான் கமல் இன்றைய எபிசோடில் விவாதிக்க உள்ளார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!