தமிழக உயர் அதிகாரிகளின் முக்கிய கவனத்திற்கு – சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

0
தமிழக உயர் அதிகாரிகளின் முக்கிய கவனத்திற்கு - சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!
தமிழக உயர் அதிகாரிகளின் முக்கிய கவனத்திற்கு - சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!
தமிழக உயர் அதிகாரிகளின் முக்கிய கவனத்திற்கு – சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

தமிழகத்தில் உயரதிகாரிகளாக பணியாற்றுபவர்களின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஆர்டர்லிகள் விடுவிப்பு:

தமிழக காவல்துறையில் நடைமுறையில் இருக்கும் ஆர்டர்லி முறைகளை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் தற்சமயம் உயர் அதிகாரிகளின் வீடுகளில் இருக்கும் ஆர்டர்லிகளை திரும்ப பெற வேண்டும் என்று முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, காவல்துறையில் உள்ள ஒரு பிரிவான ஆர்டர்லி முறையில் காவல் அதிகாரிகள் பலரும் உயர் அதிகாரிகளின் வீடுகளை கவனித்துத் கொள்ளுதல், தோட்டம் மற்றும் நாய்கள் பராமரிப்பு, அதிகாரிகளின் மனைவியர் மற்றும் குடும்பத்தினரை வெளி இடங்களுக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

ஆனால், சில காவல்துறை அதிகாரிகள் பணிச்சுமைக்கு பயந்து உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக வேலை பார்த்தும் வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கான பதவி உயர்வு, விருது உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதில் அந்தந்த உயர் அதிகாரிகள் காவலர்களுக்கு உதவி செய்வது வழக்கம். இந்த ஆர்டர்லி முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் சூழலிலும் இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்து வருவது காவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனாவை அடுத்து புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவல் – கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

இந்த நிலையில், உயரதிகாரிகளாக பணியாற்றுபவர்கள் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. இது குறித்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் ஆர்டர்லிகளை பயன்படுத்தும் உயர் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் பயிற்சி முடித்த காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!