தமிழகத்தில் கிராமங்களில் சாலைகளை மேம்படுத்த ரூ. 4000 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களில் சாலைகளை மேம்படுத்த ரூ. 4000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
சாலைகள் மேம்பாடு
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று மக்களுக்கு பல நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பேருந்துகளும், கிராமப்புறங்களை நகரத்துடன் இணைக்க சாலைகளை மேம்படுத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் படி தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிரதான சாலைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க திட்டமிட்டு வருவதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.