TNUSRB உதவி ஆய்வாளர் (SI) காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி & முழு விபரங்கள் இதோ!

0
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வு தேதி & முழு விபரங்கள் இதோ!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி & முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் காவல் துறையில் உள்ள காலிப்பணியிடத்தில் தகுதியான மற்றும் திறமையான காவலர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான SI பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது இத்தேர்வுக்குரிய தேர்வு முறை மற்றும் தேர்வு தேதி உள்ளிட்ட முழு விபரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக காவல் துறையில் உள்ள 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 20 முதல் 30 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திடீர் மின்வெட்டு ஏன்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

ஆனால் இதில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கும் மட்டும் வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் அளவீட்டுத் தேர்வு, சகிப்புத்தன்மை தேர்வு உள்ளிட்ட தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600 வரை வழங்கப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

ExamsDaily Mobile App Download

இப்பணிக்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் 25 மற்றும் 26 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வு 100 வினாக்கள் கொண்டதாக இருக்கும். ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகிறது. மேலும் தற்போது இத்தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை TNUSRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு தொடர்பான தகவல்களை பெற விரும்புவர்கள் https://www.tnusrb.tn.gov.in/pdfs/TentativewrittenexamscheduleEnglish.pdf என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!