TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்ணை தெரிந்துகொள்வது எப்படி?

0
TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு - மதிப்பெண்ணை தெரிந்துகொள்வது எப்படி?
TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு - மதிப்பெண்ணை தெரிந்துகொள்வது எப்படி?
TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்ணை தெரிந்துகொள்வது எப்படி?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) SI தகுதித்தேர்விற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தற்போது எப்படி SI தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்ணை தெரிந்துகொள்வது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SI தேர்வு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கான தேர்வை அறிவித்திருந்தது. அதாவது, தமிழ்நாடு காவல்துறை துணைப் பணியின் கீழ் 399 காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா) மற்றும் 45 காவல் துணை ஆய்வாளர்கள் (ஏஆர்) என மொத்தமாக 444 பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், Taluk & AR ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

TNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள்?

மேலும், காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா) மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள் (ஏஆர்) பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு கடந்த ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் திறன் தேர்வு (PET) , உடல் அளவீட்டுத் தேர்வு (PMT) , சகிப்புத்தன்மை தேர்வு (ET) ஆகிய தேர்வுகள் நடத்தப்படும். தற்போது TNUSRB SI தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தற்போது எப்படி TNUSRB SI தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது என்பதை பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download

முதலில், காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான tnusrb.tn.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று எழுத்துத் தேர்வு மதிப்பெண்களுக்கு உள்நுழை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு, பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து TNUSRB SI மதிப்பெண் அட்டையை பதிவிறக்கவும் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால் அந்த மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். மேலும், எழுத்துத் தேர்வில் பட்டியலிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் CV, PMT, ET & PET ஆகிய சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!