எஸ்.ஐ தேர்வு ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு !!!!!

0
எஸ்.ஐ தேர்வு ரத்து செய்ய கோரி நீதிமனறத்தில் வழக்கு
எஸ்.ஐ தேர்வு ரத்து செய்ய கோரி நீதிமனறத்தில் வழக்கு

எஸ்.ஐ தேர்வு ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு !!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள துணை ஆய்வாளர் (எஸ்.ஐ) பணியிடங்களுக்கான பணியிட தேர்வினை கடந்த ஜனவரி மாதம் நடத்தியது. கொரோனா ஊரடங்கு ஏற்பட்டுள்ளதால் அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது தான் வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது இந்த காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பானது கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகியது.

அதன் பின்னர் தேர்வானது கடந்த 2020 ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆனால் அந்த தேர்வில் குறிப்பிட்ட தேர்வறையில் தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், தேர்வு கண்காணிப்பாளர்கள் உதவி செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் இந்த தேர்வினை ரத்து செய்து விட்டு மேலும் மீண்டும் தேர்வினை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் TNPSC தேர்வு முறைகேடு ஏற்பட்டதனை தொடர்ந்து தேர்வுகளில் இவ்வாறு சிக்கல்கள் ஏற்பட்டு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here