TNUSRB Gr.II Police Constable வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
TNUSRB Gr.II Police Constable வேலைவாய்ப்பு 2023 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
TNUSRB Gr.II Police Constable வேலைவாய்ப்பு 2023 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
TNUSRB Gr.II Police Constable வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் TNUSRB ஆனது இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களை முன்னதாக தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம்
பணியின் பெயர் Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen
பணியிடங்கள் Announced Soon
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TNUSRB காலிப்பணியிடங்கள்:

Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.
TNUSRB Gr.II Police Constable வயது வரம்பு:

01.07.2022ம் தேதியின் படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Police Constable தேர்வு செயல் முறை:
  • பகுதி – I, தமிழ் மொழி தகுதித்தேர்வு
  • பகுதி – II, முதன்மை எழுத்துத் தேர்வு
  • உடற்கூறு அளத்தலல் (Physical Measurement Test)
  • உடல்தகுதித் தேர்வு (Endurance Test)
  • உடல்திறன் போட்டி (Physical Efficiency Test)
தேர்வு கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற ஆன்லைன் முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF  – Released Soon

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!