TNUSRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு ..!

0
TNUSRB PC PET தேர்வு தேதி அறிவிப்பு 2021 - நுழைவுச்சீட்டு இன்று வெளியீடு!
TNUSRB PC PET தேர்வு தேதி அறிவிப்பு 2021 - நுழைவுச்சீட்டு இன்று வெளியீடு!
TNUSRB PC PET தேர்வு தேதி – வெளியீடு !

தமிழக காவல்துறையில் சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர் உள்ளிட்ட சில பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இப்பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீட்டு சோதனை உள்ளிட்டவைகளுக்கான தேர்வு தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TN PC தேர்வு தேதி:

தமிழக காவல் துறையில் காலியாக இருந்த சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இதற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதை தொடர்ந்து தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற இருந்தது. கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட PET தேர்வுக்கான தேதிகள் தற்போது வெளியாகி உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்களை சேர்க்க அனுமதி – முதல்வர் ஆலோசனை !!

முன்னதாக இரண்டாம் கட்ட தேர்வுகளான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டி உள்ளிட்டவற்றில் 1:5 விகிதத்தில் கலந்து கொள்வதற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் தேர்வுக்குழும இணையதளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19 தேதி அன்று வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் படி மார்ச் மாதம் 8 ஆம் தேதியில் இத்தேர்வுகள் நடைபெற இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர்வுகள் மீண்டுமாக ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அறிவிக்கப்பட்ட படி ஏப்ரல் 21 ஆம் தேதியன்று தேர்வில் கலந்துகொள்ள இருந்த தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு வெளியான நிலையில், இவை மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜூலை 2) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் கீழ், சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீட்டு சோதனை, பொறையுடைமை சோதனை மற்றும் உடல் திறன் சோதனை ஆகியவற்றை இம்மாதம் 26 ஆம் தேதி முதல் நடத்த வாரியம் முடிவு செய்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டும் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Download TN PC PET Exam Date 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!