தமிழக இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வான 8,538 பேர் 3ம் தேதி பயிற்சியில் சேர உத்தரவு !!!!

0

தமிழக இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வான 8,538 பேர் 3ம் தேதி பயிற்சியில் சேர உத்தரவு !!!!

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளிலுள்ள 8,888 காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடத்தப்பட்டன.

தேர்வர்களின் பட்டியல்: 

மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் இணையதளம் மூலம் கடந்த பிப்ரவரி 4ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் இறுதியாக 2,410 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலை காவலர்கள்  மாவட்ட, மாநகர  ஆயுதப்படைக்கும் 5,962 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கும், 210 விண்ணப்பதாரர்கள் சிறைத்துறைக்கும் மற்றும் 191 விண்ணப்பதாரர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கும் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தேர்வுகளின் பட்டியல் விவரங்களை அறிய கீழே கிளிக் செய்யவும்.

FINAL PROVISIONAL SELECTION LIST (Enrolment No. wise)
FINAL PROVISIONAL SELECTION LIST (Roster wise)
பயிற்சியில் சேர உத்தரவு !!!!

இந்நிலையில், இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வான 8,538 பேர் வரும் 3ம் தேதி சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு அளிக்கும் தகவலின்படி காலை 7 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். பயிற்சி வகுப்பில் சேருவதற்கு முன்பு தேர்வான அனைத்து இரண்டாம் நிலை காவலர்களும் சுவாச பிரச்னை, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். அதன்பின் பணிகளை அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் கமாண்டன்ட் அதிகாரிகள் மேற்கொள்வார்கள். அதன் பிறகே காவலர்களுக்கு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்படும் என்று காவலர் பயிற்சி பள்ளி டிஜிபி கரன் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!