
TNUSRB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு – இன்று (பிப். 6) முதல் துவக்கம்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,552 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கான எழுத்து தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று (பிப்.6) உடற்தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது.
உடற்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் பணிபுரிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வானது 3552 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது. அதில் பலர் தேர்வாகி இருக்கின்றனர். இந்நிலையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று (பிப். 6) தொடங்கி பிப். 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உச்சநீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் நியமனம் – இன்று (பிப். 6) பதவி ஏற்பு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் மாவட்ட வாரியாக உடற்தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் கல்விச் சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள் மற்றும் தற்போது பணிபுரிபவர்கள் துறை தலைவரிடமிருருந்து பெற்ற தடையில்லா சான்று, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சான்றிதழ், விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்
மேலும் கடலூரில் 876, திருச்சியில் 400 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.முதலில் சான்றிதழ் சரிபார்த்தல் பிறகு, உயரம், மார்பளவு அளத்தல், 1,500 மீட்டர் ஓட்டம் நடைபெறும். பிறகுகயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் என்ற தகுதி நிலை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.