TNUSRB  காவலர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு – முழு விவரங்கள் இதோ!

0
TNUSRB  காவலர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு - முழு விவரங்கள் இதோ!
TNUSRB  காவலர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு - முழு விவரங்கள் இதோ!
TNUSRB  காவலர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு – முழு விவரங்கள் இதோ!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில், காவலர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TNUSRB தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவருக்கும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த இலவச பயிற்சி வகுப்பு குறித்த முழுமையான தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச பயிற்சி பற்றிய விவரம்:

TNUSRB என்னும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் அனைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான சீருடை பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்து ஆண்டும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 30.06.2022 அன்று வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 3,552 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த காவலர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 07.07.2022 அன்று முதல் 15.08.2022 அன்று வரை Online மூலம் பெறப்பட உள்ளது. தற்போது இந்த எழுத்து தேர்வுக்கு பதிவு செய்து தங்களை தேர்வுக்காக தயார்படுத்தி கொண்டு இருக்கும் நபர்களுக்கு உதவும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆனது இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த  இலவச பயிற்சி வகுப்பில் 18 வயது பூர்த்தி அடைந்த TNUSRB நடத்தும் எழுத்து தேர்வுக்கு முன்பதிவு செய்த நபர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பானது ஒரு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதாவது திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. காவலர் பணிக்கான எழுத்து தேர்வு விண்ணப்பித்த நபர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!