TNUSRB 3000+ போலீஸ் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
TNUSRB 3000+ போலீஸ் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
TNUSRB 3000+ போலீஸ் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
TNUSRB 3000+ போலீஸ் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தற்போது இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

TNUSRB மெகா ஆட்சேர்ப்பு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பு 2022 -க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

இந்த அறிவிப்பின் படி, போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் எழுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்:
காவல்துறை
  • இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை): 2,180 (ஆண் – 1,526, பெண்/ திருநங்கை – 654)
  • இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை): 1,091 (ஆண்கள் மட்டும்)
சிறை மற்றும் சீர்திருத்தத்துறை
  • இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை): 161 (ஆண் – 153, பெண்/ திருநங்கை – 8)
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
  • தீயணைப்பாளர்: 120 (ஆண்கள் மட்டும்)
தகுதி வரம்பு:

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பு / SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2022 அன்று 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC, BC (M), MBC/DNC பிரிவினர் 28 வயது வரையிலும், SC, SC(A), (ST) மற்றும் திருநங்கைகள் 31 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

TNUSRB தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும். அதாவது எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் NCC, NSS, Sprots/Games சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிக தேர்வு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
தேர்வு கட்டணம்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.130 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பதாரர் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை TNUSRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!