TNUSRB உதவி ஆய்வாளர் SI 444 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் காவல் துறையில் தற்போது உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு 444 காலியிடங்கள் இருப்பதாகவும் மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உதவி காவல் ஆய்வாளர்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வருட துவக்கத்தில் tnpsc குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் பணியிடங்களை அறிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பணியிடங்களுக்கு மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் இதனை விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஏப்ரல் 17 (இன்று) ஆம் தேதியை அறிவித்து உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
இதனை காலிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், வயது வரம்பு 01.07.2022 அன்று முதல் 20 முதல் 30 வயது வரை முடிந்து இருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும், காவல்துறையில் பணியாற்றுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.tnsrb.tn.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.