தமிழக ஊராட்சித் துறையில் புதிய வேலை – 10,000 ரூபாய் சம்பளம்

0
தமிழக ஊராட்சித் துறையில் புதிய வேலை - 10,000 ரூபாய் சம்பளம்
தமிழக ஊராட்சித் துறையில் புதிய வேலை - 10,000 ரூபாய் சம்பளம்
தமிழக ஊராட்சித் துறையில் புதிய வேலை – 10,000 ரூபாய் சம்பளம்

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலகு ஆகிய ஊராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள வட்டார வள பயிற்றுநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM, Sivagangai)
பணியின் பெயர் வட்டார வள பயிற்றுநர் (Block Resource Person)
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக ஊராட்சித் துறை பணியிடங்கள்:

வட்டார வள பயிற்றுநர் (Block Resource Person) பணிக்கு என 12 பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
வட்டார வள பயிற்றுநர் பணிக்கான தகுதிகள்:
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் கணினி இயக்கும் திறன் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் சுய உதவி குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றில் பணி சார்ந்த துறையில் குறைந்தது 05 வருடங்கள் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் உள்ளூரை சேர்ந்த நபராக இருக்க வேண்டும்.

TNSRLM வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.09.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TNSRLM சம்பளம்:

இந்த தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

தமிழக ஊராட்சித்துறை தேர்வு முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNSRLM விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடைசி நாளுக்குள் (16.08.2022) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!