தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

0
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆனது வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNSRLM காலிப்பணியிடங்கள்:

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Block Coordinator கல்வி தகுதி:

TNSRLM திருவண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். MS Office ல் குறைந்தது 6 மாத சான்றிதழ் படிப்பு முடித்து (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

31.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாதந்தோறும் ரூ.40,000/- சம்பளத்தில் பிரசார் பாரதியில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Coordinator பணிக்கான அனுபவ விவரம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

TNSRLM பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், திருவண்ணாமலை வேங்கிக்கால் & அஞ்சல், 606 604 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 31.03.2023 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!